நள்ளிரவில் கனடா பிரதமரின் முக்கிய அறிவிப்பு! அடுத்த 72 மணி நேரத்திற்கு அமலுக்கு வரும் நடவடிக்கை!

test negative
Canada will require incoming international air passengers to test negative before boarding, and other news from around the world.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.

புதிய கரோனா வைரஸ் அச்சத்தால் பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமாதாக இருந்தது.

இந்த கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்றார்போல வளர்சிதை மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

புதிய வகை கொரோனா வைரஸ் பழைய வைரசின் பாதிப்பு சக்தியை கொண்டிருந்தபோதும், பழைய கொரோனா வைரசை காட்டிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதாக இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், வளர்சிதை மாற்றம் அடைந்து புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அடுத்த 72 மணி நேரத்திற்கு, இங்கிலாந்து விமானங்கள் அனைத்தும் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், நான் Incident Response குழுவுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தேன். பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட கோவிட்-19 வைரஸின் புதிய மாறுபாட்டில் கவனம் செலுத்தியுள்ளோம்.

உங்களையும் நாடு முழுவதும் உள்ள மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் புதிய எல்லை கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

அடுத்த 72 மணி நேரத்திற்கு, இங்கிலாந்து விமானங்கள் அனைத்தும் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும். இன்று வந்த பயணிகள் இரண்டாம் நிலை திரையிடலுக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் தொடரும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: வீட்டிலிருந்து வேலை செய்யும் கனேடியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசின் முக்கிய அறிவிப்பு!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.