வைரஸ் தொற்றுக்கள் குறைவாக உள்ள இடத்தில் தளர்வுகள் – இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!

Ontario ford and christine eliot
Ontario ford and christine eliot

ஒன்டாரியோ மாகாண முதல்வர் டாக் போர்டு மற்றும் அவரது கேபினட் அமைச்சர்கள் திங்கட்கிழமை (இன்று) ஊரடங்கு கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் நீட்டிப்பதற்கான அறிவித்தல்களை பற்றி ஆலோசிப்பதற்காக கூடுகின்றனர்.

மேலும் வைரஸ் தொற்றுக்கள் குறைவாக உள்ள இடத்தில் தளர்வுகள் ஏற்படுத்துவதற்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

திங்கட்கிழமை அன்று யோக் பகுதியானது ஒன்டாரியோவின் 34 வரிசையில் 31 வது இடத்திற்கு வந்துள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் நிற வாரியாக 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிற அடிப்படையிலான பகுதிகளுக்கு தளர்வுகள் வைரஸ் சுற்றுகளின் எண்ணிக்கையை பொறுத்தே ஏற்படுத்தப்படும்.

சிவப்பு மண்டலத்தில் கீழுள்ள பகுதியில் இருக்கக்கூடிய விடுதிகளில் பத்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

இதனோடு டாக் போடு அவர்கள் மருத்துவக் குழுவிடம் இருந்து வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

மருத்துவக் குழுக்கள், “ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும். ஏனெனில் வைரஸ் தொற்று களின் எண்ணிக்கை அதே நிலையில் அல்லது அதைவிட அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது என்று தெரிவித்திருந்தனர்”. இந்த முதல்வர் டாக் போர்டு ஏற்க மறுத்தார்.

இதையும் படியுங்க: உயிருக்கு போராடும் நபர்! பிரதமர் அறிவித்து சிறிது நாட்களில் டொரண்டோவில் அரங்கேறிய சம்பவம்!