NDP கட்சியுடன் கூட்டணியா? – பிரதமரை சந்திக்க மறுத்த ஜக் மீட்

jagmeet singh
jagmeet singh

கனடாவின் NDP கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் ,கூட்டணி அரசாங்கத்தைப் பற்றி விவாதிப்பதற்கு லிபரல் கட்சித் தலைவர் மற்றும் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவினை நேரில் சந்திப்பதற்கு செவ்வாய்க்கிழமை அன்று மறுப்பு தெரிவித்தார்.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் லிபரல் கட்சி சிறுபான்மை இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சி NDP கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் நடைபெறும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தலைநகர் ஒட்டாவாவில் ” கூட்டணி பற்றிய எந்த விவாதமும் இருக்கப்போவதில்லை. எந்த ஒரு கட்சியிலும் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு உறுதியாக இல்லை” என்று செவ்வாய்க்கிழமை ஜக்மீட் தெரிவித்தார்.

கனடிய மக்களுக்காக பாராளுமன்றத்தில் பணியாற்றுவதற்கு அவரது கட்சியினர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தலில் 10 இடங்களை இழந்து 160 இடங்களில் மட்டுமே பிரதமர் ட்ரூடோ வெற்றி பெற்றார்.

covid-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவதற்கான நோக்கத்தில் அவசரமாக கனடிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சிறுபான்மை பெற்றதால் சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மற்ற கட்சிகளின் ஆதரவு லிபரல் கட்சிக்கு தேவைப்படுகிறது.

என்டிபி கட்சியுடன் லிபரல் கட்சி கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு அழிவை ஏற்படுத்தும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்குமா என்பது காத்திருந்து கவனிக்கவேண்டிய விஷயம் தான்.