லிபரல் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட NDP கட்சி – இரு கட்சிகளும் கூட்டணியா?

jagmeet labourday

கனடாவில் நடந்த முடிந்த பிரதமர் தேர்தலில் லிபரல் கட்சியினர் சிறுபான்மையில் வெற்றி பெற்றனர்.லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ கனடிய பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். தற்பொழுது லிபரல் சிறுபான்மை அரசாங்கத்தை 2025 ஆம் ஆண்டு வரை அதிகாரத்தில் வைத்திருக்க ஜனநாயக கட்சியினரும் லிபரல் கட்சியினரும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

புதிய ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் இன்னும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இது லிபரல் கட்சியினர் தேசிய மருந்தகங்கள் மற்றும் பல் பராமரிப்பு அமைப்புகளில் செயல்படுவதை காணமுடியும். இவற்றில் NDP கட்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

திங்களன்று இரவு லிபரல் Caucus கூட்டம் நடைபெறுவதாக ஊடகங்களிடம் ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டன. ஆனால் லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ Caucus உடனான சந்திப்பிற்கு முன்னதாக லிபரல் அமைச்சரவையுடன் அறிவிக்கப்படாத சந்திப்பு நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

பிரதமர் ட்ரூடோவை அடுத்து NDP கட்சித் தலைவர் ஜக்மீட் சிங் ஒரு செய்தி மாநாட்டை திட்டமிட்டுள்ளார். லிபரல் கட்சியின் தற்காலிக ஒப்பந்தம் ஒரு “கூட்டணி ” என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் இடைக்கால தலைவர் Candice Bergen திங்கள்கிழமை இரவு செய்தி அறிக்கையை வெளியிட்டார்.