விரைவில் வருகிறது கனடாவின் சானோடைஸ் நேசல் ஸ்பிரே – 99.9 சதவீதம் கொரோனாவை கொல்லும்!

SaNOtize
A Vancouver-based company is making an anti-COVID-19 nasal spray that will soon be tested in a clinical trial in the United Kingdom – Jan 11, 2021 Leave A Comment

கனடாவைச் சேர்ந்த SaNOtize நிறுவனம் உருவாக்கி உள்ள nasal spray தடுப்பூசி மருந்து, 99.9 சதவீதம் கொரோனா வைரசை கொல்லும் செயல்திறன் வாய்ந்தது என பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் Vancouver பகுதியை சேர்ந்த சானோடைஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ள நைட்ரிக் ஆக்சைட் நேசல் ஸ்பிரே மருந்தானது , 99.9 சதவீதம் செயல்திறன் மிக்கது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உட்டா மாநில பல்கலைக்கழகத்தின் ஆன்டிவைரல் ஆராய்ச்சி மையத்தில் நடந்த பரிசோதனையில் செயல்திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நைட்ரிக் ஆக்சைடை அடிப்படையாகக் கொண்ட இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்தால், கொரோனா வைரசானது நுரையீரலுக்குள் செல்வதற்கு முன்பாக அவற்றை அழித்துவிடுகிறது.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்துகொள்ள வேண்டும். இப்படி செய்வதால், கொரோனா வைரஸ் உடலின் உள்ளே நுழையாமல் தடுக்கப்படும்.

இதேபோல் தொண்டையில் மருந்து படும்படி வாய் கொப்பளித்தல், மூக்கு துவாரங்களில் மருந்தை செலுத்தி சுத்தம் செய்தல் போன்ற சிகிச்சையும் செய்ய முடியும்.

மனித உடலுக்குள் நைட்ரிக் ஆக்சைடின் முக்கியத்துவம் மற்றும் அதன் குணப்படுத்தும் பண்புகளை முதன்முதலில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபெரிட் முராத் கண்டுபிடித்தார்.

இந்த கண்டுபிடிப்புக்காக அவர் உள்பட 3 பேராசிரியர்களுக்கு 1998 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது. பேராசிரியர் முராத், சானோடைஸ் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:

மோசமான நேரம் இது! உலகின் சோகமான குடிமக்களின் தரவரிசையில் கனடியர்கள்!