கனடிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி – உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது

nasa

அமெரிக்காவின் நாசா நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப்ஸ்பேஸ் தொலைநோக்கியை கிறிஸ்துமஸ் அன்று காலை விண்வெளியில் ஏவப்பட்டது. கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு தொலைநோக்கி விண்வெளியில் ஏவப்பட்டது தொலைநோக்கி உருவாக்கத்தில் பங்காற்றிய கனடிய விஞ்ஞானிகளை உணர்ச்சிவச படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

கனடிய மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் காரணமாக தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து ஐரோப்பிய ஏரியன் ராக்கெட்டின் மூலம் சனிக்கிழமை அன்று விண்வெளியில் ஏவப்பட்டது.

தொலைநோக்கியை விண்வெளியில் ஏவுதலை நேரில் பார்ப்பது மிகச்சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு என்று தொலைநோக்கியின் முதன்மை புலனாய்வாளர் டோயன் கூறினார். Covid-19 வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான கனேடிய விஞ்ஞானிகள் வீட்டிலேயே இருக்க நேர்ந்தது என்பதையும் குறிப்பிட்டார்

தொலைநோக்கி திட்டத்தில் 20 ஆண்டுகளாக பணியாற்றிய பின்னர் ஆச்சரியமளிக்கும் சிறந்த தருணமாக உள்ளது என்றும் நேர்காணலின்போது முதன்மை புலனாய்வாளர் ரெனே டொயன் கூறினார். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று இந்நிகழ்வு நடந்திருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் கனடாவிற்கு இது மிகச் சிறந்த தருணம் என்றும் அவர் கூறினார்.

பல வருட திட்டம் மற்றும் பல விஞ்ஞானிகளின் உழைப்பினால் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி பூமியை விட்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியேறுவதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக விஞ்ஞானி ஒல்லட் கூறினார்.