கனடாவில் மற்றொரு பரபரப்பு! வேற்றுகிரகவாசிகள் படையெடுப்பின் அறிகுறி காட்டப்பட்டுள்ளதா?

monoliths-Found
Monoliths Found Canada

அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுபோன்ற நிகழ்வு உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கனடாவிலும் அதுபோல ஒரு மர்மதூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பளபளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத்தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தூணை யார் நிறுவியது? எப்படி இந்த தூண் இங்கு கொண்டுவரப்பட்டது? என எந்த விவரமும் தெரியாமல் இருந்தது. அந்த தூண் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் மர்மமான முறையில் மாயமானது.

உலகம் முழுவதிலும் இருந்தும் பலர் இது எலியன்கள் பூமிக்கு வருவதான அறிகுறி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், யூட்டா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தூணை போன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் நிறுவப்பட்ட தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இதுவரை மொத்தம் 6 மர்மதூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை உலகின் பல நாடுகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மர்மமான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கனடாவில் வின்னிபெக் பகுதியில் இந்த மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிடோபாவில் பழைய பினாவா அணைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக உலகம் முழுவதும் இது போல மர்ம சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்தா ஆண்டு இறுதிக்குள் உண்மை தெரிய வருமா? என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்க: கனடாவில் கொரோனா சிகிச்சைக்காக சென்ற பெண் மருத்துவமனை காவலர்களால் தாக்கப்பட்டு சடலமாக மீட்பு!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.