கனடாவில் தீவிரமாகும் உருமாறிய கொரோனா திரிபு – கலக்கத்தில் சுகாதாரத் துறையினர்!

HEALTH-CORONAVIRUSCANADA

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் உருமாறிய covid-19 இனங்காணப்பட்டுள்ளது. மேலும் இந்த உருமாறிய கொரானா வைரஸ் இந்தியாவில் இருந்து உருமாற்றம் அடைந்த திரிபுகள் என்று கூறப்படுகிறது.

ஒன்டாரியோ மாகாணத்தின் பொது சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி 36 உருமாறிய திரிபு பாதிப்புகள் கடந்த சில நாட்களாகவே பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த பாதிப்புகளில் ஆறு பாதிப்புகள் மாகாணத்தின் பொதுசுகாதார அமைப்பு நடத்திய மரபனு கண்காணிப்பு நிகழ்ச்சி நிரலின் மூலமாக பரவி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து அந்த அமைப்பு பாதிப்படைந்த 6 பேரும் சர்வதேச அளவில் பயண தொடர்பு கொண்டிருந்ததாக அறிவித்துள்ளது. மற்ற 30 பாதிப்புகளும் மாகாண விமான நிலையங்களிலும் எல்லைப் பகுதியிலும் பயணம் செய்தவர்கள் என்று கூறப்படுகிறது.

பொது சுகாதார அமைப்பு தொடர்ந்து உருமாறிய திரிபுகள் குறித்து ஆய்வுகளை நடத்தி விவரங்களை வெளியிட்டு வருகிறது. தற்பொழுது இனம் காணப்பட்டுள்ள உருமாறிய திரிபு sars-cov-2 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அல்பேட்டா மற்றும் கியூபெக் போன்ற இதர மாகாணங்களில் B.1.617 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளன.

இந்த இரண்டு வகையான திரிபு வைரஸ்களும் முதன்முறையாக இந்தியாவில் மார்ச் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்.

இந்த இரண்டு வகையான உருமாற்றம் அடைந்த வைரஸ்களும் மனித உடம்பில் உள்ள செல்கள் உடன் எளிதாக பிணைந்து கொள்ளும் மேலும் எதிர்ப்பு சக்தி அமைப்பினை விரைவில் குறைத்துவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.