வாகன ஓட்டிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை – பனிப்பொழிவில் பார்வைத் திறன் குறையும் அபாயம்

Weather
Weather Alert Toronto

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்படுமென்று எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கூடிய பனிப்புயல் வீசும் என்று சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

வடக்கு யார்க், உக்ஸ்பிரிட்ஜ் பீவர்டன் ,கிரேட்டர் டொரன்டோ மற்றும் வடக்கு டர்ஹாம் பகுதிகளுக்கு பனி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை 10 சென்டி மீட்டர் வரையிலான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்ஜியா விரிகுடாவில் இருந்து பனிமூட்டம் இந்தப் பகுதிகளுக்கு நகர்ந்து வருவதால் விரைவாக குவியும் பனிப் பொழிவை ஏற்படுத்தும்.

கனடாவின் மிட்லாண்ட், ஹில்ஸ்டேல்,கோல்ட் வாட்டர், பேரி, காலிங்வுட் மற்றும் லகூன் சிட்டி ஆகிய இடங்களில் 25 சென்டி மீட்டர் வரை பனிப் பொழிவு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது. மேலும் கிரேட்டர் டொரன்டோவிற்கு வடக்கு பகுதியில் 25 சென்டி மீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பனிமூட்டம் காணப்படும் பகுதிகளில் 30 சென்டி மீட்டர் வரை பனிப் பெய்யக்கூடும் என்று சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. Lindsay adn southern kawartha ஏரிகள் பகுதியிலும் 5 முதல் 10 சென்டிமீட்டர் வரையிலான பனிப் பொழிவு ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அமலில் உள்ளது.டொரண்டோவிற்கு வானிலை எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை

சாலைகளில் பனி மூட்டத்தின் போது பயணம் மிகக் கடினமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு சுற்றுச்சூழல் கனடா அறிவுறுத்தியுள்ளது. பலத்த வடமேற்கு காற்றுடன் பனிப்பொழிவு ஏற்படும் என்பதால் சாலைகளில் பார்வைத் திறன் குறையும் என்று சுற்றுச்சூழல் கனடா கூறியது குறிப்பிடத்தக்கது ஆகும்