டொரண்டோவில் இன்னும் பத்தாயிரம் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

AstraZeneca vaccine
Ontario premier says new age recommendations for AstraZeneca vaccine

டொரண்டோவில் இன்னும் பத்தாயிரம் தடுப்பூசி மருந்துகள் இருப்பதாக நகர பொது சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த தடுப்பூசி மருந்துகள் அனைத்தையும் அடுத்த வாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தடுப்பூசி மருந்துகளை அவசர தேவைக்காக 75 வயது மேற்பட்டோருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

Covid-19 தடுப்பூசி மருந்துகளுக்கான முன்பதிவுகள் விரைவாக GTA பகுதியில் கடந்த சிறிது வாரங்களிலேயே பதிவு செய்யப்பட்டு உள்ளது .

ஆனால் செய்தியின் வாயிலாக 5 மருத்துவமனைகளில் சுமார் 30000 தடுப்பூசி மருந்துகளுக்கான முன்பதிவுகள் தங்களிடம் இருப்பதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியிடப்பட்டது.

மேலும் ஒரு மருத்துவமனையில் ஆராயிரம் தடுப்பூசி மருந்துகள் 75 வயது மேற்பட்டோருக்குசெலுத்துவதற்கானஅனைத்து வசதிகள் உள்ளதாகவும், மேலும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கான பற்றாக்குறைகள் தங்களிடம் இல்லை என்றும் நகர பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் மேயர் ஜான் டோரி அவர்கள் தங்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் அடுத்த வாரத்திற்கு விநியோகிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், அந்த தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் 75 வயதுக்கு மேற்பட்ட தனது நண்பர்கள் மற்றும் தாத்தா பாட்டி போன்ற வரை வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

முன்பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி மருந்து விநியோகித்தல் நடவடிக்கைக்கு டொரன்டோ நகரில் சுமார் 5 தடுப்பூசி மருந்து மையங்கள் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.