கனடாவில் அதிக அளவில் தடுப்பூசி மருந்துகள் வினியோகம்

Moderna
The storage requirements of the Moderna vaccine, just approved by Health Canada, are less onerous than those required for Pfizer-BioNTech's vaccine. (Dado Ruvic/Reuters)

தடுப்பூசி மருந்துகள் வினியோகம் :

கனடாவில் இந்த வாரம் கிட்டத்தட்ட 7.1 மில்லியன் Covid-19 தடுப்பூசி மருந்துகள் பெறும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவற்றில் 4 மில்லியன் covid-19 தடுப்பூசி மருந்துகள் மாடர்னா மற்றும் 3.1 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் பைசர் பயோடெக் ஆகும்.

கடந்த வியாழக்கிழமை அன்று ஒட்டாவாவில் இருந்து மெய்நிகர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெனரல் கிரிஸ்டாவா பிராடி “ஒவ்வொரு கனடியருக்கும் covid-19 தடுப்பூசி மருந்து போட போதுமான அளவில் தடுப்பூசி மருந்துகள் உள்ளது ” என்று கூறியுள்ளார். பிராடி நாடு முழுவதும் தடுப்பூசி மருந்து விநியோகத்தை மேற்பார்வையிட்டு வருகிறார். ஏற்கனவே 2 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் வினியோகத்தை தடுத்து வைத்துள்ளது.

தக்க வைத்திருக்கும் தடுப்பூசி மருந்துகளின் அளவுகள் வழங்கல் தேவையைவிட அதிகமாக உள்ளதால் தடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையின் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட அளவுகளின் தொகையிலிருந்து அதிகமான அளவில் தடுப்பூசி மருந்துகளை மாகாணங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார். கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் விரைவாக விநியோகித்தல் மற்றும் தடுப்பூசி பராமரிப்பு போன்றவற்றிற்கு இந்த நடவடிக்கைகள் சிறந்த வழிமுறையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்கொடை அளிக்கும் கனடா :

உலகிலேயே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விகிதம் கனடாவில் மிக அதிகமாக உள்ளது. கனடாவிலுள்ள கனடியர்கள் சுமார் 79 சதவீதம் மக்கள் குறைந்த பட்சம் முதல் கட்ட தடுப்பூசி மருந்து மட்டுமாவது செலுத்தி உள்ளார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிற நாடுகளுக்கு நன்கொடையாக 17.7 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை வழங்க இருப்பதாக கனடா கூறியுள்ளது.