கனடாவில் 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை? புகைப்படத்துடன் போலீசார் வெளியிட்ட தகவல்!

Manpreet Kaur
Missing Woman in Toronto, Ontario – Manpreet Kaur, 23

கனடாவில் Manpreet Kaur இந்தியப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவர் குறித்த தகவலை டொராண்டோ காவல் துறையினர்  புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி ஞாயிறு அன்று உள்ளூர் நேரப்படி இரவு 7.18 மணிக்கு Manpreet Kaur என்ற 23 வயது இளம்பெண் காணாமல் போயிருக்கிறார்.

Manpreet Kaur கடைசியாக Victoria Park Av + Danforth Av பகுதியில் காணப்பட்டுள்ளார். அங்கிருந்து தான் அவர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட Manpreet Kaur ஒல்லியான உடல்வாகுடன் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கலாம் என காவல்துறையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

அவர் குறித்த தகவல் காவல் துறையினரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் உள்ள எவரும் 416-808-4200 என்ற எண்ணில் காவல்துறையினரையும், அநாமதேயமாக 416-222-TIPS (8477) என்ற எண்ணிலும், www.222tips.com என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்.

ஆன்லைனில் பேஸ்புக்கில் உதவிக்குறிப்பு பக்கத்தை அனுப்பலாம். அல்லது text TOR and your message to CRIMES (274637). ஐடியூன்ஸ் அல்லது கூகிள் பிளேயில் இலவச க்ரைம் ஸ்டாப்பர்ஸ் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

இதையும் படியுங்க: கனடாவில் ஒன்ராறியோவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.