பிராம்டனில் 60 வயது மூதாட்டியை உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளிய மர்ம நபர்!

brampton
Area of Mayfield Rd/Van Kirk Dr in Brampton

60 வயது நிரம்பிய மூதாட்டியை வாகனத்தால் மோதிய வாகன ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கனடாவிலுள்ள பிராம்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

60 வயதுடைய இந்த மூதாட்டி சிங்குவாகாசி சாலை மற்றும் பிளவர் டவுன் அவென்யூ பகுதியில் உள்ள சாலையை கடந்து கொண்டிருக்கும் பொழுது குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் சரியாக 11 மணி அளவில் மோதப்பட்டு விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக காவல்துறையினர் கூறிவருகின்றனர்.

மூதாட்டி தற்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் டிராமா மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விபத்தினை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்று விட்டார் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய வாகனமானது 2018 அல்லது புதிய அடர்ந்த கிரே நிறத்திலான ஹோண்டா சிவிக் என்றும் கருதப்படுகிறது.

விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை கைது செய்வதற்கான சான்றுடன் யாரேனும் டேஸ் கேம் காணொளியுடன் அல்லது குற்றவாளி பற்றிய தகவலை தெரிந்து கொள்வதற்கு விசாரணை செய்பவர்களிடம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை வேகமாக இயக்கி 60 வயது மூதாட்டியை உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளி கருணையின்றி வாகனத்தை நிறுத்தாமல் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்ற ஓட்டுநரை விசாரணைகளின் மூலம் விரைவில் கைது செய்து விடுவோம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.