அதிகாலை பயங்கரம்! அபாயகரமான நிலையில் உள்ள ஆண்! கனடாவில் பீல் பிராந்திய காவல்துறையின் அறிவிப்பு!

brampton
Area of Mayfield Rd/Van Kirk Dr in Brampton

கனடாவின் பிராம்டன் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் ஆண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்ததாகவும் மேலும் துப்பாக்கி சூட்டினால் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும் பீல் பகுதியை சேர்ந்த காவல் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

சம்பவம் மே பீல்டு ரோடு மற்றும் வான் டிரைவ் பகுதியில் நடந்திருக்கிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு காவல் துறையினர் சரியாக அதிகாலை 2:15 மணி அளவில் சென்றிருக்கின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர் பலத்த காயத்துடன் இருந்தார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் பாதிக்கப்பட்டவரை டிராமா மையத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் விரைந்து சேர்த்தனர் .

மேலும் அச்சுறுத்தும் வகையிலான எந்தவித அறிவிப்பும் காவல் துறையினரால் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க:

கனடாவில் பனிப்பொழிவின் உக்கிரம்! பள்ளி பேருந்து சேவையில் உண்டான சிக்கல்!

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் சிறப்பு பிரிவு காவல் துறையினர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் காவல் துறையினரின் புலன் விசாரணைக்காக மூடப்பட்டுள்ளது. காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.