கனடாவில் வெப்ப அலை சாதனையை படைத்த நகரம் :பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பிறப்பிக்கப்பட்ட வெளியேற்ற உத்தரவுly

bc

லிட்டன் பி.சி – கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் கிராம பகுதியான லிட்டனில் வசிக்கும் மக்களை அங்கு ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக வீடுகளை காலி செய்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியேற்ற உத்தரவை புதன்கிழமை அன்று மேயர் ஜான் வோல்டர்மன் அறிவித்திருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் “பரவிவரும் காட்டுத் தீ அச்சுறுத்தக் கூடியது, ஏற்கனவே செவ்வாய்க்கிழமை அன்று காட்டுத்தீயை 49.6 C அளவில் கையாண்ட குடியிருப்புவாசிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையில் இருந்தது ” என்று தெரிவித்துள்ளார்.

பகுதியின் குடியிருப்பாளர்கள் அனைவரும் அந்த இடத்தைவிட்டு விரைவாக வெளியேறி வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று மேயர் ஜான் போல்டர் மேன் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசர உதவி சேவைகள் கிடைக்கும்போது இது குறித்து தகவல்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காட்டுத்தீ ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் வெளியேற்ற உத்தரவு அறிவிக்கப்பட்டதாக மாகாணத்தின் தீ விபத்து தகவல் அதிகாரி எரிகா கூறியுள்ளார். காட்டுத் தீயின் அளவு மோசமானதாக இருக்கும் என்பது ஆரம்பத்தில் அவர் அறிந்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பகுதியின் வளங்களை திரும்ப பெறுவதில் எங்களது முன்னுரிமை அமையும் என்றும் மேலும் விபத்து பகுதிக்கு தீவிர பதிலளிக்கும் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கனடா அதிக வெப்பநிலையில் இந்த கிராமம் சாதனையை படைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கிராமத்திற்கு அருகே மற்றொரு சிறிய தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு குழுவினர் போராடி வருவதாக எரிகா தெரிவித்துள்ளார்.