கனடாவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பகுதி! ஆனால் முக்கிய கட்டத்தில் வைக்கப்பட்ட செக்!

British Columbia
Parts of British Columbia were

கனடாவிலுள்ள சில பகுதிகளுக்கு ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தொற்று எண்ணிக்கையின் அடிப்படையிலேயே ஊரடங்கு தளர்வுகள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கனடாவிலுள்ள டோரன்டோ மற்றும் பில் பகுதிகளில் நேற்றிலிருந்து வெளிப்புறத்திலிருந்து விநியோகம் செய்யப்படும் உணவகங்களின் உணவுகளை உண்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை முதல்வர் டாக் போர்டு அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த அறிவித்தல் ஆனது நேற்று ஒன்டாரியோவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்பட்டன.

மேலும் இந்த அனுமதியானது சாம்பல் நிறத்தின் கீழ் இயங்கும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்த கூடியது என்றும் அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஒன்டாரியோ பகுதியில் மஞ்சள் நிறத்தில் கீழ் இயங்கும் பகுதிகளிலுள்ள உணவகங்களுக்கு 100 பேரும், சிவப்பு நிறத்தின் கீழ் இயங்கும் பகுதியில் உள்ள உணவகங்களில் 50 பேரும் அமர்ந்து உணவருந்தலாம் என்று கட்டுப்பாட்டுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்கள் அனைத்தையும் நிற வாரியாக பிரித்து பின்பு அதன் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்க படுதல் என்பது தொற்றுக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்று கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் கனடிய மக்கள் இந்தத் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது