திடீரென மாற்றப்பட்ட உத்தரவு! கனடாவில் அவசரநிலை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பகுதிகள்!

COVID19
COVID19 Canada

டொரன்டோ, பீல், மற்றும் யாக் போன்ற பகுதிகளில் ஊரடங்கு பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மேலும் இந்த பகுதிகளில் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை அவசரநிலை ஊரடங்கு ஆனது நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பிய பின்னரும் டொரன்டோ, பீல் மற்றும் யாக் போன்ற பகுதிகளில் பாடசாலைகளை திறப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது.

மேலும் தொற்று ஏற்பட்டிருக்கும் பகுதியானது எந்த நிறத்தின் கீழ் உள்ளது என்பது பொறுத்தே பாடசாலைகள் திறப்பு பற்றிய அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேயேர் ஜான் டோரி டொரண்டோவில் தொற்று எண்ணிக்கை பற்றி இன்று பிற்பகல் 2 மணி அளவில் அறிவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கனடாவின் தடுப்பூசி மருந்து விநியோகிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கனடாவின் தலைநகர் ஒட்டாவா அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கனடாவின் பல்வேறு மாகாணங்களும் தொற்று விகிதம் சார்ந்த நிறத்தின் மாற்றத்தைப் பொறுத்து ஊரடங்கு தளர்வு அறிவிக்கப் படுவதாக தீர்வு.

கனடாவின் சுகாதார அதிகாரி ஆனந்த் அவர்கள் “கனடா அரசு இன்னும் ஆறு மில்லியன் தடுப்பூசி மருந்துகளை மார்ச் மாத இறுதிக்குள் பெற்றுவிடும் “என்று அறிவித்துள்ளார்.

மேலும் பைசர் நிறுவனத்திடமிருந்து 336 ஆயிரம் மருந்துகளை கப்பல் வழியாக அடுத்த வாரத்திற்குள் பெற்றுக்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: கனடாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று தொடங்கும் மகிழ்ச்சி தருணம்!