கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் கட்டுப்பாட்டு தளர்வுகள்

lockdown
corona case canada
மாகாணங்களில் அறிவிக்கப்படும் கட்டுப்பாட்டு தளர்வுகள்

கனடாவில் மாகாணங்கள் முழுவதும் Covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பொது நிகழ்வுகள், பொழுதுபோக்குகள் மற்றும் வணிகங்கள் போன்றவற்றை மீண்டும் திறப்பதற்கு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் பெரும்பான்மையானோர் முதல்கட்ட தடுப்பூசியை மட்டுமாவது செலுத்தி கொண்டுள்ளதால் Covid-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது சிறந்த வழிமுறையாகும் என்று கூறப்படுகிறது.

கனடாவில் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைபவர்களின் தினசரி எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகின்றது .தடுப்பூசி செலுத்துவதற்கான தினசரி இலக்குகளை அடைவதன் மூலம் தினசரி பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நியூபவுன் லேண்ட்
நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடர் மாகாணத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டால் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் வணிகங்கள் போன்றவற்றுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

கியூபெக்
கியூபெக் மாகாணத்தில் உட்புற நிகழ்வுகளில் 3500 பேரும், வெளிப்புற நிகழ்வுகளில் ஐயாயிரம் பேரும் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில்லறை கடைகளின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சமூக இடைவெளியின் தூரம் குறைக்கப்பட்டு உள்ளது.

நியூ பிருன்ஸ்விக்
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்றிருக்க வேண்டும் என்ற இலக்கை நியூ பிரின்ஸ்விக் மாகாணம் எட்டியுள்ளது. Covid-19 தொற்று எண்ணிக்கை அம்மாகாணத்தில் குறைந்ததை தொடர்ந்து இரண்டாம்கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட நடவடிக்கையாக covid-19 கட்டுப்பாடுகள் அனைத்தையும் மாகாண அரசாங்கம் நீக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

நோவா ஸ்கோஷியா, பிரின்ஸ் எட்வேர்ட் ஐலண்ட், ஒன்டாரியோ, மணிதொபா மற்றும் சச்கெச்சுவான் போன்ற மாகாணங்களில் covid-19 கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.