Covid-19 தளர்வுகள் – தேவைகள் அதிகரிக்கும் என்று ரத்த சேவை மையங்கள் தெரிவிப்பு

lockdown
corona case canada

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கல்கேரி நகரில் covid-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதால் கனடாவின் ரத்த விநியோகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அல்பேட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் சஸ்கஸ்வானில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருவதால் தேவைகள் அதிகரித்து வருகின்றன.

வடமேற்கு பிரதேசங்களில் ரத்ததான சமூகங்கள் இயக்குனர் டிரேஸி ஸ்மித் ” “மாகாணங்களில் படிப்படியாக கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்படுவதால் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர் மேலும் மருத்துவமனையின் தேவை அதிகரித்து வருகிறது ” என்று கூறினார்.

Covid-19 தொற்று நோய்களின் போது பல்வேறு அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை இப்போது தொடங்குவதற்கு ரத்தத் தேவைகள் அதிகமாகி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

16 மாதங்களுக்கு முன்னர் தொற்றுநோய் தீவிரமாக பரவியதால் ரத்த தயாரிப்புகள் அனைத்தும் வியக்கத்தக்க முறையில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மிக முக்கியமான மற்றும் அவசர அறுவை சிகிச்சைகளை தவிர எனி சிகிச்சைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

கனடாவின் 37 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 400000 பேர் வழக்கமான அடிப்படைகளில் ரத்தத்தை வழங்குகிறார்கள். சில ரத்ததான மையங்கள் மற்றும் மொபைல் கிளினிக்குகளில் நேரங்களை நீட்டிப்பது உட்பட அதிகரித்துள்ள தேவையை ரத்ததான மையங்கள் மாற்றங்களைச் செய்துள்ளன.

கடந்த ஆறு வாரங்களில் ரத்தத்திற்கு ஆன தேவை எவ்வளவு அதிகரித்து உள்ளது என்பதை ஸ்மித் கூற இயலவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. உலக அளவிலான ரத்த வகைகள் அவசர அறைகளில் பயன்படுத்துவதாகக் கூறுகிறது