டெல்டா மாறுபாட்டின் காரணமாக ஒன்டாரியோ மாகாணத்தில் தடுப்பூசி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் – கீரன்

Ontario residents

டொரன்டோ மற்றும் பீல் பகுதிகளில் mRNA தடுப்பூசிகளை பகுதிகளில் அமைந்துள்ள கிளினிக்குகளில் வினியோகிக்க தொடங்கும்.இருவேறு தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டும் மக்களுக்கு பொது சுகாதார அமைப்பு அறிவுரைகள் வழங்கிய போதிலும் கலப்பு அளவிலான தடுப்பூசி மருந்துகளை செலுத்துவதில் மக்களிடையே தயக்கம் நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த mRNA தடுப்பூசி மருந்துகள் விநியோகிப்பது மூலம் தயக்கம் காட்டும் மக்களை எட்ட முடியும்.

மாகாணத்திலுள்ள கிளினிக்குகள் பைசர் பயோ டெக் மற்றும் மாடர்னா போன்ற இரு தடுப்பூசி மருந்துகளையும் கடந்த ஜூன் மாதத்தில் வினியோகம் செய்தன.முதல் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாம் கட்டத்தில் வேறு தடுப்பூசியை பெறுவார்கள் என்று கூறியபோது சிலர் கிளினிக்கை விட்டு வெளியேறியதாக கூறப்படுகின்றது.

தயக்கம் காட்டும் இந்த மக்களை தடுப்பூசி செலுத்தும் இலக்கில் எட்டுவதற்கு பீல் பொது சுகாதார அமைப்பு “பைசர் ஃப்ரைடே” என்ற புதிய திட்டத்தை தொடங்கியது. மக்களில் பலரும் முன் பதிவு செய்ததன் காரணமாக இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த வாரம் ஒன்டாரியோ மாகாணம் 1.2 மில்லியன் பைபர் தடுப்பூசி மருந்துகளையும் அடுத்த வாரம் 1.6 மில்லியன் பைசர் தடுப்பூசி மருந்துகளையும் பெற்றுக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பைசர் தடுப்பூசி மருந்து வழங்களில் அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஒன்டாரியோ மாகாணத்தில் 65 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முழுமையாக இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்றுள்ளனர். மேலும் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஒன்டாரியோ மக்கள் முதல் கட்ட தடுப்பூசி மருந்து பெற்றுள்ளனர். இருப்பினும் டெல்டா மாறுபாட்டின் தீவிர பரவல் காரணமாக தடுப்பூசி பெற்றவர்களின் விகிதத்தை 90 சதவீதமாக அதிகரிப்பதற்கு மாகாணம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுகாதார அமைப்பின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் வலியுறுத்துகிறார்.