பெற்றோர்கள் இப்போது நோய் அறிகுறிகள் தென்பட்டால், தங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.
மேலும் அவர்கள் கொரோனா தொற்றுக்கான பொதுவான அறிகுறியைக் காட்டினால் கூட COVID-19 பரிசோதனையைப் செய்ய வேண்டும் என பீல் மற்றும் டொராண்டோ அதிகாரிகள் கூறுகிறார்கள்.
புதிய வழிகாட்டுதலின் கீழ் டிச. 7 முதல் மூக்கு ஒழுகுதல், தலைவலி, குமட்டல் அல்லது தொண்டை புண் உள்ளிட்ட மோசமான அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்கள் எந்தவொரு குழந்தையையும் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கு அனுப்பக் கூடாது.
மேலும் அறிகுறிகள் காட்டாவிட்டாலும் கூட, அவர்களுடன் வசிக்கும் எந்த உடன்பிறப்புகளையும் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.
அறிகுறி தென்பட்ட குழந்தைக்கு சுகாதார பரிசோதனை அல்லது COVID-19 சோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒத்த அறிகுறிகளைக் காட்டினால் பெற்றோர்களும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, டொராண்டோ பொது சுகாதாரத்துறை மூக்கு ஒழுகுதல், தலைவலி, குமட்டல் அல்லது தொண்டை புண் உள்ளிட்ட அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள், குறைந்தது 24 மணிநேரம் வீட்டிலேயே தங்கி, அந்த அறிகுறியில் இருந்து மீண்டவுடன் பள்ளிக்கு திரும்பலாம் என கூறப்பட்டிருந்தது.
தற்போது அந்த அறிகுறியில் இருந்து மீண்டு வந்தாலும், பரிசோதனை செய்யுங்கள். தொற்று இல்லை என்றால் மட்டும், மீண்டும் பள்ளிக்கு வாருங்கள்” என்று டொராண்டோவின் சுகாதார முதன்மை மருத்துவ அதிகாரி கூறினார்.
37.8C க்கு மேல் காய்ச்சல், சுவை அல்லது வாசனை இழப்பு, இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிற அறிகுறிகள் எப்போதும் வீட்டிலேயே உடனடி தனிமைப்படுத்தல் மற்றும் COVID-19 சோதனை தேவையாகும்.
இந்த புதிய வழிகாட்டுதல் பீல் பிராந்தியத்திலும் நடைமுறைக்கு வருகிறது. அங்கு அதிகாரிகள் 10 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட சிறு குழந்தைகளிடையே கொரோனா அதிகரிப்பு விகிதங்களைக் கண்டறிந்து வருவதாகக் கூறுகின்றனர்.
இதையும் படியுங்க: நொடியில் மாறிய வாழ்க்கை – கனடாவில் சமையலறைவிட்டு வெளியேறும் போது, பணக்காரியான பிரிட்டீஷ் கொலம்பியா பெண்!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.