கனடாவில் கரோக்கி நடனத்திற்கு தடை – கியூபெக் முதல்வர் லெகால்ட் ஓமிக்ரோனுக்கு எதிரான நடவடிக்கை

restaurant food
mayor

Covid-19 வைரஸ் தொற்று பாதிப்புகள் மேலும் அதிகரித்து விடாமல் இருக்க covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் மட்டும் போதாது என்று கியூபெக்கின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கியூபெக்கர்கள் தங்களது தொடர்புகளை பாதியாக குறைக்க வேண்டும் என்று முதல்வர் பிரான்கோயிஸ் லெகால்ட் கூறினார்.

கவலைக்குரிய மாறுபாடான ஓமிக்ரோன் தொற்று சில வாரங்களுக்குள் மருத்துவமனைகளில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு ,கூடுதலாக covid-19 கட்டுப்பாடுகளை முதல்வர் லெகால்ட் அறிவித்துள்ளார்.

ஓமிக்ரோன் மாறுபாட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை முதல் மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சில்லறை விற்பனையகங்கள் மற்றும் பார்கள் போன்றவை 50 சதவீத திறனோடு செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்கள், உணவு விடுதிகள் போன்றவற்றில் கரோக்கி நடனம் மற்றும் பாட்டு நிகழ்ச்சி போன்றவை தடை செய்யப்படும். வழிபாட்டுத் தலங்களில் நுழைவதற்கு வழிபாட்டாளர்கள் தடுப்பூசி ஆதாரத்தை காட்ட வேண்டும்.

ஓமிக்ரோன் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட அதிகமாகப் பாதிக்கக்கூடியது .எனவே மூன்றாவது தடுப்பூசி பூஸ்டரை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். Covid-19 நோய்த்தொற்று உடன் தொடர்புடைய ஐந்து உயிரிழப்புகளை கியூபெக் சுகாதாரத்துறை அறிவித்தது.

63 பேர் covid-19 வைரஸ் தொற்றுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், 305 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.