ராணுவ கொடுமைகளை எதிர்த்த பெண் ஆர்வலர் கனடாவில் மர்ம மரணம்!

Karima Baloch
Activist Karima Baloch was found dead in Toronto (Photo: Twitter/karimabaloch)

கனடாவில் தஞ்சம் அடைவதற்காக 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து தப்பிச் சென்ற பலுசிஸ்தானைச் சேர்ந்த கரீமா பலோச் (Karima Baloch) என்ற ஆர்வலர் டொராண்டோவின் லேக்ஷோர் அருகே ஹார்பர்பிரண்டில் இறந்து கிடந்தார்.

முன்னதாக கரிமா பலூச் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் காணாமல் போயிருந்தார். டொராண்டோ பொலிசார் அவரைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் உதவி கோரியிருந்தனர்.

கனேடிய நகரமான டொராண்டோவின் லேக்ஷோர் அருகே ஒரு தீவில் இருந்து கரிமா பலூச்சின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர்.

கரீமா பலூச்சின் கணவர் ஹம்மல் ஹைதர் மற்றும் சகோதரர் அவரது உடலை அடையாளம் கண்டுள்ளனர். அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை.

டொராண்டோவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், கரீமா பலூச்சின் மரணத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து காவல்துறையும் கனேடிய பாதுகாப்பு நிறுவனமான சி.எஸ்.ஐ.எஸ்ஸும் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

“பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ முகவர்களிடமிருந்து கனடாவை அகற்ற பிரதமர் ட்ரூடோ செயல்பட வேண்டும்” என்று பத்திரிகையாளர் கூறினார். பலோச் தேசிய இயக்கம் கரிமா பலூச்சிற்கு 40 நாட்கள் இரங்கல் தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தானில் வசித்து வந்த கரீமா பலுச் என்ற பெண் ஆர்வலர், சுவிட்சர்லாந்தில் நடந்த ஐ.நா. கூட்டத்தொடரில் கூட ராணுவ அடக்குமுறை விவகாரம் பற்றி எடுத்து பேசினார்.

கடந்த 2016ம் ஆண்டு உலகின் 100 செல்வாக்கான பெண்கள் பற்றிய பி.பி.சி.யின் பட்டியலில் கரீமா இடம் பிடித்துள்ளார்.

அவர் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் அளித்த பேட்டியில், பலுசிஸ்தான் வளங்களை பாகிஸ்தான் எடுத்து கொண்டு அந்த மக்களை அழித்து வருகிறது என குற்றச்சாட்டு எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: கொரோனா தடுப்பூசியை பகிரங்கமாகப் பெறுவதாக பிரதமர் ஜஸ்டின் உறுதியளிப்பு!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.