கனடாவுக்கு திரும்ப இயலாத சூழல் ஏற்படலாம் – கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

test negative
Canada will require incoming international air passengers to test negative before boarding, and other news from around the world.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனடாவுக்குத் திரும்பும் மக்கள் ஹோட்டலில் 14 நாட்களுக்கு தங்கள் சொந்த செலவில் COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

“மக்கள் நாட்டிற்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்கள் அல்லது விடுமுறை பயணங்களைத் திட்டமிடக்கூடாது” என்று ட்ரூடோ கூறினார்.

நாம் இன்னும் சில நாட்களுக்குள் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை அறிவிக்க இருக்கிறோம் என்று கூறிய அவர், எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம்.

அப்படி முன்னறிவிப்பு எதுவுமின்றி திடீரென கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும்பட்சத்தில், உங்களால் கனடாவுக்கு திரும்ப இயலாத சூழல் ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.

இது சுற்றுப்பயணம் செய்யும் நேரமல்ல என்று கூறியுள்ள அவர், இளவேனிற்காலம் வருகிறது, அப்போது மக்கள் வீடுகளிலிருப்பது அவசியமாகிறது.

இந்த கொரோனாவின் இரண்டாவது அலையை கொல்வதை உறுதி செய்து அதனால் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் பெற தயாராக இருக்கவேண்டும் என்றார்.

ஜனவரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது என்று கூறியுள்ள அவர், குறிப்பாக ஒன்ராறியோவில் நிலைமை படு மோசமாக இருந்தது என்றார்.

ஆகவேதான், நமது அரசு நகரும் மருத்துவ அமைப்புகளை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளது என்று கூறிய பிரதமர், அதனால், கூடுதலாக 200 படுக்கைகள் கிடைக்கும், மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கொஞ்சம் இடம் கிடைக்க இது உதவும் என்றார்.

இதையும் படியுங்க:

விரைவில் வருகிறது கனடாவின் சானோடைஸ் நேசல் ஸ்பிரே – 99.9 சதவீதம் கொரோனாவை கொல்லும்!