அடுத்த கட்டத்தில் கனடா: தன்னுடைய 3 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப ஆயத்தமாகும் பிரதமர்!

British Columbia
Prime Minister Justin Trudeau tells Global BC anchor Sophie Lui why he is sending his kids back to school during the COVID-19 pandemic.

British Columbia : சில வாரங்களுக்கு முன்பு, பிரதமர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குழந்தைகள் பள்ளிக்கு திரும்பிச் செல்வார்களா என்பது குறித்து, அவரது குடும்பத்தினர் இன்னும் முடிவு செய்யவில்லை என கூறியிருந்தார்.

இந்த நிலையில் குளோபல் நியூஸ் ஊடகத்தின் தொகுப்பாளரான சோஃபி லூயிடம் பேசிய ட்ரூடோ, தனது மூன்று குழந்தைகளும் அடுத்த வாரம் மீண்டும் வகுப்புக்குச் செல்வார்கள் என்று கூறினார்.

“என் குழந்தைகள் மீண்டும் வகுப்புக்குச் செல்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரிடமும் இருப்பது போல, திட்டங்கள் என்ன? பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? என்பதை நாங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம், ”என்று ட்ரூடோ கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் குழந்தைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்புவது குறித்து நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள் முடிவு செய்து வருகின்றனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில், தொலைதூர கற்றல் நடைமுறை, முகக்கவச கொள்கை மற்றும் வகுப்பறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடல் ரீதியான தூரத்தை கடைபிடித்தல் ஆகியவை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

குழந்தைகள் பள்ளிக்கு திரும்புவதற்காக ஒதுக்கப்பட்ட கூட்டாட்சி பணத்தில் 242 மில்லியன் டாலர்களை, எவ்வாறு செலவிடுவது என்பதை தீர்மானிக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

பி.சி.டி.எஃப் தலைவர் டெரி மூரிங் கூறுகையில், மாகாணம் ஏற்கனவே துப்புரவு மற்றும்  சுகாதாரத்திற்காக பணத்தை ஒதுக்கியுள்ளது.

மேலும் பள்ளி மற்றும் வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க கூட்டாட்சி நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும், “எங்கள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம், ஆசிரியர்கள் எங்கள் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க விரும்புகிறார்கள்” என்று மூரிங் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: முகக்கவசம் அணிய மறுத்த விமான பயணிகளுக்கு 1,000 டாலர் அபராதம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.