“நாங்கள் பயப்படவில்லை ” கனடிய பிரதமர் ட்ரூடோ ட்வீட் – போராட்டக்காரர்களின் வெறுக்கத்தக்க செயல்களுக்கு அடிபணியப் போவதில்லை

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் லாரி ஓட்டுநர்களின் வலுவான போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகி விட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு காரணமாக ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன.

தலைநகரில் நடைபெறும் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் கனடிய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. Covid-19 ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் போராட்டத்திற்கு மக்கள் பயப்படுவதில்லை எனவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

COVID-19 பரிசோதனையில் நேர்மறையான முடிவினை பெற்ற ஜஸ்டின் ட்ரூடோ போராட்டம் தொடங்கியதிலிருந்து ரகசிய இடத்தில் தனிமைப் படுத்திக் கொண்டு இருப்பதாக கூறினார். போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளால் கனடிய மக்கள் வெறுப்படைந்து உள்ளதாக பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

போராட்டத்தின்போது நாட்டு வீரர்களின் நினைவுச் சின்னங்களை சேதப்படுத்துவது போன்ற நாச காரியங்களை செய்பவர்களை கருத்தில் கொள்ள மாட்டோம் என்றும், இனவாத கொடிகளை பறக்க விடுபவர்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் சில எதிர்ப்பாளர்கள் சிறு வணிக தொழிலாளர்கள் மீது வன்முறை செய்பவர்கள் மற்றும் வீடற்றவர்களிடமிருந்து உணவு பொருட்கள் போன்றவற்றை திருடுபவர்களைக் கண்டு பயப்பட போவதில்லை என்றும் பிரதமர் ட்ருடோ தெரிவித்துள்ளார் .

தடுப்பூசி ஆணைக்கு எதிராக போராட்டக்காரர்கள் தலைநகரில் குவிந்ததைத்தொடர்ந்து பிரதமரும் அவரது குடும்பத்தினரும் அவர்களது வீட்டை விட்டு வெளியேறி ரகசிய இடத்திற்கு புலம்பெயர்ந்தனர். போராட்டத்திற்கு அதிக அளவில் நிதி கிடைத்துள்ளது. லாரிகள் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது