மாகாண முதல்வர்களின் கூட்டத்தில் பிரதமர் ட்ரூடோ விவாதம் – போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை

commons debate liberal ndp conservative

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று காலை மாகாண முதல்வர்களை அழைத்து கூட்டத்தை நடத்தினார். Covid-19 ஆணைக்கு எதிரான Freedom Convoy போராட்டம் தலைநகர் ஒட்டாவாவில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக நீடிக்கிறது. மாகாண முதல்வர்களுக்கு போராட்டம் குறித்து விளக்கம் அளிப்பதாகவும் மற்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதாகவும் பிரதமர் ட்ரூடோ கூறினார் .

போராட்டக்காரர்களின் முற்றுகைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் இருக்கக்கூடிய கூடுதல் நடவடிக்கைகளை விவாதித்ததாக பிரதமர் ட்ரூடோ ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்றுவரும் போராட்டத்தை சமாளிக்க சிறப்பு அவசரகால அறிவிப்புகளை வெளியிடுவதற்கு அவசரகால தயார்நிலை அமைச்சர் பில் ப்ளேர் மத்திய அரசுடன் விவாதித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.இதற்கு முன்பு எப்போதும் நடைமுறைப்படுத்தப்படாத அவசரகால அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அணுகுமுறை குறித்து அமைச்சர் பில் பிளேயர் விவரித்தார்.

இது பொருத்தமான எச்சரிக்கை என்று அவர் கூறினார். கனடியர்களின் உயிர்கள் ,நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு தீவிரமாக தீமை ஏற்படும் நிலையில் அவற்றைச் சமாளிக்க அவசரகால சட்டம் உடனடியாக பிரகடனப்படுத்த படும் என்று தெரிவித்தார். ஒரு நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசாங்கம் கார்டே பிளான்ஸ் சட்டத்தை வழங்குகிறது.

மாகாணத்தின் முதல்வர்கள் அவசரகாலச் சட்டத்தை முழுமையாக பயன்படுத்துவதை உறுதி படுத்துவது குறித்து பிளேயர் வலியுறுத்துகையில் மத்திய அரசாங்கம் தேவையான அனைத்து வசதிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளது என்றார்.