மோதல்கள் முடிவுக்கு வருமா? -ஜோ பைடன் மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சந்திக்க திட்டம்

Coronaviru Canada lost a record one million jobs in March

மெக்சிகோ மற்றும் கனடாவின் தலைவர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 18ஆம் தேதி அதிபர் ஜோ பைடன் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு ஐந்து ஆண்டுகளில் முதல் முறையானது என்று குறிப்பிடப்படுகிறது.தலைவர்களின் சந்திப்பு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்க அதிபர் இந்த வருடம் பதவியேற்றதிலிருந்து மெக்ஸிகோ மற்றும் கனடாவின் தலைவர்களுடன் மெய்நிகர் வாயிலாக சந்திப்புகளில் கலந்து கொண்டார். தற்பொழுது Covid-19 வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளிலும் குறைந்து வருவதைத் தொடர்ந்து நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தலைநகர் ரோமில் நடைபெற்ற G20 மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் ஜோ பைடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது ஆகும். அமெரிக்காவின் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்றார் .ஆனால் அதன் பின்பு வர்த்தக மோதல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மின்சார வாகனங்களுக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் கனடாவிற்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. அமெரிக்காவின் நடவடிக்கைகள் வாகன தொழிலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஒட்டாவா கூறுகிறது. அமெரிக்கா மற்றும் கனடா மெக்சிகன் எரிசக்தி குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தின.

மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒபரட்டர் அலுவலக கருத்துகளுக்கான கோரிக்கைகளுக்கு கனடா மற்றும் அமெரிக்கா பதில் அளிக்கவில்லை. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் ட்ரூடோவின் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டன.