காவலர்களின் இனவெறி, மிருகத்தனமான செயலுக்கு தீர்வு – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த அற்புதமான யோசனை!

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர், காவலரால் கழுத்தில் மிதித்து கொல்லப்பட்ட சம்பவம், உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க அரசின் செயலை கண்டித்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில், காவல் துறையினர் பொதுமக்கள் மீது பிரயோகிக்கப்படும் இனவெறி மற்றும் மிருகத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகளின் சீருடைகளில் கேமராக்களை பொருத்த, மாகாண முதல்வர்களை வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கமெராக்கள் ஆவணப்படுத்துகின்றன. கனடாவில் காவலர்கள் மக்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள் என்பது குறித்து ஆதாரத்துடன் புகார்களை தெரிவிக்க, எளிய வழி அவை’ என கூறியுள்ளார்.