ரஷ்யாவின் தற்காலிக போர் நிறுத்தம் – ஐரோப்பாவுக்கு செல்லும் கனடிய பிரதமர்

commons debate liberal ndp conservative

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பாவிற்கு புறப்பட உள்ள நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பின் விளைவாக பெரும்பாலான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறுகின்றனர்.

துறைமுக நகரங்களான Mariupol மற்றும் Volnovakha ஆகிய நகரங்களில் வசிப்பவர்களுக்கான பாதுகாப்பான பாதைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் என்று ரஷ்யப் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள Donetsk-ல் உள்ள ராணுவ தலைவர் கூறினார். ஆனால் போர் நிறுத்தம் ஏற்படுமா என்றும் போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்றும் அவர் கூறவில்லை.

உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலை குறித்து விவாதம் செய்வதற்காக பிரிட்டன் மற்றும் நெதர்லாந்தின் பிரதமர்களுடன் திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் சந்திப்புகளுக்கு ,கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்ட நிலையில் ரஷ்யாவின் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

ஜஸ்டின் ட்ரூடோவின் பயணத்தின்போது கனடிய ஆயுதப் படை உறுப்பினர்கள் மற்றும் நேட்டோவின் செயலாளரையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யாவின் இரக்கமற்ற நடவடிக்கைகள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை உக்ரேனில் இருந்து வெளியேற்றுவதற்கு வழிவகுத்தது. ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் நட்பு நாடுகளுடன் இணைந்து ட்ரூடோ பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.