நிலைமை பலவீனமாக உள்ளது – போராட்டக்காரர்களை தடுக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டம்

commons debate liberal ndp conservative

கனடாவில் எல்லை தாண்டும் லாரி ஓட்டுநர்களுக்கு லிபரல் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட covid-19 ஆணைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய போராட்டம் மற்றும் முற்றுகைகள் போன்றவற்றை மீண்டும் தொடங்குவதை தடுக்க காவல்துறை அழைக்கக்கூடிய அவசரகால அதிகாரங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு கனடிய சட்டவல்லுனர்கள் வாக்களித்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டு வாரங்களாக ஆர்ப்பாட்டக்காரர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தை காவல்துறை முடிவுக்கு கொண்டு வந்த போதிலும் ,போராட்டக்காரர்களின் மறு போராட்டத்தை தடுக்க இன்னும் அதிகாரங்கள் தேவை என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.மேலும் அவசரகால தயார்நிலை அமைச்சர் பில் பிளேயர் “போராட்டக்காரர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் உயிர்நாடிக்காக சென்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் எல்லை கடப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் வார இறுதியில் மேற்கொள்ளப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் கூறினார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைநகர் ஒட்டாவாவிற்கு வெளியே இன்னும் சில போராட்டக்காரர்கள் இருப்பதாகவும் அவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்குவதற்கு திட்டமிடலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அவசரகாலச்சட்டம் நாட்டின் சில பகுதிகளை செல்லக்கூடாத பகுதிகளாக அறிவித்தது. இது லாரி ஓட்டுநர்களின் தனிப்பட்ட மற்றும் தனியார் நிறுவன வங்கி கணக்குகளை முடக்கவும் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது

தலைநகரை சுற்றிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்னும் காத்திருப்பதாக NDP கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் தெரிவித்தார். நிலைமை இன்னும் பலவீனமாக இருப்பதால் கனடாவில் அவசரகால நிலை இன்னும் அமலில் உள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்