கனடா – covid-19 வைரஸ் தொற்றுக்கு பலியானார் ஜோஷி ;ஆன்லைனில் இரங்கல் தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

corona cases in canada nearly 10,000 death toll 111 - கனடாவில் கொரோனா பாதிப்பு 10,000 நெருங்கியது - இறந்தவர்கள் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

ஒன்ராறியோவின் செனட்டர் மற்றும் சட்ட வழக்கறிஞரான ஜோசி பாரஸ்ட் – நீசிங் covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 56 வயதான ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை வீடு திரும்பியதாக அவரது அலுவலகம் தெரிவித்திருந்தது.

செனட்டர் ஏற்கனவே நுரையீரல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் அவர் முழுமையாகப் பெற்றுள்ளார். ஏற்கனவே நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் மிகுந்த கவனத்தோடு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜோசி தனது மருத்துவ நிலை மற்றும் நுரையீரல் கோளாறுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருந்தபோதிலும் covid-19 வைரஸ் தொற்றினால் பலியாகிவிட்டார் என்று அவரது அலுவலகம் கூறியது.

கனடியர்கள் அனைவருக்கும் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துமாறு அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தினார்.மேலும் தன்னை கவனித்துக் கொண்ட மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பல்வேறு செனட் உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சட்ட உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் ஆன்லைன் வாயிலாக அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அன்புக்குரியவர்களை துக்கத்தில் நினைத்துக் கொண்டிருப்பதாக இரங்கல் தெரிவித்துள்ளார்.