அமெரிக்கா-கனடா இடையிலான முக்கிய திட்டம் இரத்து – புதிய அமெரிக்க அதிபரின் தலைகீழ் மாற்றம்!

Trans Canada
Trans Canada Pipe Line Project

அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டிரம்பின் சில கொள்கை முடிவுகளை மாற்றி அமைத்துள்ளார்.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார்.

அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.

கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் பைடன்.

அதில் அமெரிக்கா-கனடா இடையிலான முக்கிய திட்டம் ஒன்றையும் ரத்து செய்துள்ளார். அமெரிக்க – கனடா எரிவாயு இணைப்பு திட்டமான கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளிலும் கையெழுத்திட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ் எல் குழாய் அமைப்புத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அதிபர் ஒப்புதலை பைடன் திரும்பப் பெற்றார்.

இந்த திட்டத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பூர்வகுடி அமெரிக்கர்களும் 10 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.

வெள்ளிக்கிழமை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பைடன் தொலைபேசியில் பேசும்போது இந்த விவகாரத்தை விவாதிப்பார் என்று வெள்ளை மாளிகையின் புதிய ஊடகச் செயலாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

இது குறித்து தகவல் தந்தால் 100,000 டாலர் வெகுமதி – ஜூலை 20 வரை வாய்ப்பு உங்கள் வசம்!