ரொறன்ரோவில் இளம் வயதினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஹெல்த் கார்டு எனப்படும் மருத்துவ அட்டை தேவை இல்லை!

Statistics Canada
Nine out of 10 Canadians have seen COVID-19 misinformation online: Statistics Canada

ரொறொன்ரோவில் இளம் வயதினருக்கு முதல் கட்ட தடுப்பூசி செலுத்த இருப்பதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாகாணத்தில் ஆங்காங்கே உள்ள கிளினிக்குகள் covid-19 தீவிரமாகி உள்ள பகுதிகளில் வசிக்கும் இளம் வயதினருக்கு திறக்கப்பட்டு இருப்பதாகவும், எனினும் அவர்களில் சிலருக்கு வயது வரம்பின்றி வீட்டிலிருந்தே பணிபுரிய இயலாதவர்களுக்கும் தடுப்பூசி மருந்து வினியோகம் செய்ய விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று மாகாணம் தெரிவித்துள்ளது.

மேலும் முன்பதிவு இன்றி தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கான இடத்தின் பட்டியல்களையும் மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி மருந்து செலுத்திக் கொள்ள செல்பவர்கள் தங்களுடைய முகவரி ஆதாரத்தோடு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஹெல்த் கார்டு எனப்படும் மருத்துவ அட்டை தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த கிளினிக்குகள் ஆனது காலை 9 மணியிலிருந்து தடுப்பூசி மருந்துகள் காலியாகும் வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Downsview arena, chalkfarm park, jimmie simpson recreation centre, General Mercer public school, Boys and Girls club of east Scarborough, Albert campbell collegiate institute போன்ற ஆறு இடங்களில் உள்ள வெவ்வேறு அஞ்சல் குறியீட்டு பகுதிகளில் செயல்படும் என்றும் மாகாண அரசாங்கம் தெரிவித்து உள்ளது.

Covid-19 தீவிரமடைந்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் ஏற்கனவே உடல் நலக்குறைவால் இருப்பவர்கள் ஆகிய அனைவரும் தடுப்பூசி மருந்துகளை முன்பதிவு இன்றி உடனடியாக பெற்றுக்கொள்ள இவ்வாறு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசாங்கம் தெரிவித்து உள்ளது.