தந்தையானார் NDP கட்சி தலைவர் – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்

jagmeet and his baby

கனடாவின் NDP கட்சியின் தலைவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக் மீட் சிங் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாள் பிறந்தநாள் பரிசாக பெண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார்.அவரும் அவரது மனைவி குர்கிரண் கவுரும் அவர்களது குழந்தையை திங்கள் கிழமை அன்று உலகிற்கு வரவேற்றனர்.

“சக்தி வாய்ந்த எங்களது பெண் குழந்தை எனது பிறந்தநாளுக்கு கிடைத்த பரிசு ” என்று ஜக் மீட் சிங் அவரது மகிழ்ச்சியை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். தாய் மற்றும் குழந்தை நலமாக இருப்பதாகவும் நன்றியினால் நெஞ்சங்கள் நிறைந்து உள்ளதாகவும் ஜக்மீட் சிங் தெரிவித்தார்

தனது பெண் குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள் சிங் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார். NDP கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங்கின் மகள் பெயர் சீக்கிய பாரம்பரியத்தின் படி பிறந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு “naam karan” என்ற விழாவில் சூட்டப்படும். மகளின் பெயர் உடனடியாக வெளியிடப்படாது.

என்டிபி கட்சியின் தலைவரான ஜக் மீட் சிங் ஆடை வடிவமைப்பாளரான அவரது மனைவியை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீக்கிய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்தார். மெக்சிகோ நகரில் தேனிலவு கொண்டாடினர்

மனைவியின் மகப்பேறு காலத்தில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த என்டிபி கட்சி தலைவர் குழந்தை பிறந்ததை தொடர்ந்து சில காலம் தந்தையர் விடுப்பு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மனைவி மற்றும் குழந்தையுடன் நேரம் செலவிட என்டிபிசி தலைவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்