குடிவரவு மற்றும் குடியுரிமை கனடா – விடுதியில் தங்கியுள்ள அகதிகளுக்கு வீடுகள்

afghan refugees in ottawa
afghan refugees in ottawa credit cbc news

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த பிற நாட்டு மக்கள் மற்றும் ஆப்கானிய மக்களும் வேறு நாடுகளுக்கு குடியேற தொடங்கினர்.

உலகின் பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த தனது நாட்டு மக்களை விமானங்களின் மூலம் தனது நாட்டிற்குள் கொண்டுவந்தன. கனடிய அரசாங்கம் 40 ஆயிரம் அகதிகளை குடியேற்றம் செய்வதாக உறுதி அளித்திருந்தது

தாலிபன் அமைப்பின் ஒழுங்கில்லாத விதிமுறைகளையும், வன்முறைகளையும் ஏற்றுக்கொள்ள விரும்பாத ஆப்கானிய மக்களும் தனது சொந்த இருப்பிடம் மற்றும் உடைமைகளை இழந்து உடனடியாக அயல்நாடுகளுக்கு குடியேறுவதற்கு தலைநகர் காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

கனடாவிற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகள் விமானங்கள் மூலம் வந்தடைந்தனர். கனடிய அரசாங்கம் ஆப்கானிய அகதிகளை குடியேற்றம் செய்வதற்கு உறுதி அளித்திருந்தது.கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள விடுதி ஒன்றில் 300-க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பதற்றத்துடன் வெளியேறிய அகதிகள் சிலர் குடியேற்ற ஆவணங்களை முழுமையாக கொண்டுவரவில்லை என்று கூறுகின்றனர். முழுமையற்ற ஆவணங்களுக்கு IRCC குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா மாதந்தோறும் வழங்கும் வாழ்க்கைச் செலவு நிதியை வழங்காது என்று நிர்வாக இயக்குனர் நிக்கல்சன் கூறியுள்ளார்

 

தலைநகர் ஒட்டாவாவில் ரியல் எஸ்டேட் நிறுவனரான ஜாவேத் சுல்தானி அகதிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். அவரது குடும்பம் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குடும்பமாகும்.அகதிகள் வேலை வாய்ப்பு கேட்டு கடிதங்கள் எழுதியுள்ளனர். அவற்றை எங்கள் நிறுவனத்தால் வழங்க இயலாது. மாறாக நில உரிமையாளர்களுக்கு முதல் மற்றும் கடைசி மூன்று மாதங்களுக்கு டெபாசிட் வழங்குகிறோம் என்று சுல்தானி தெரிவித்துள்ளார்