போக்குவரத்து பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் – அறிவிப்பை வெளியிட்ட கனடாவின் முக்கிய மாகாணம்!

Middlesex-London
Ambulances sit in front of the emergency department at Victoria Hospital in London, Ont. on Wednesday, November 25, 2020. THE CANADIAN PRESS/Geoff Robins

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் போக்குவரத்து பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று மாகாணத்தின் முதல்வர் ஜோன் கார்கன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து பயணக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுவதும் covid-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மாகாணத்தின் பாதுகாப்பிற்காக மாகாணம் முழுவதும் விரைவாக covid-19 வைரஸ் தொற்று பரிசோதனைகள் சோதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தடுப்பூசி மருந்துகள் விரைவாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முன்னேற்பாடுகளை மாகாண அரசாங்கம் எடுத்து வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார். ‘

மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகள் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு விதிமீறல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மாகாணத்தில் வாழும் மக்கள் நலன் கருதியே இந்தவித கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட அமலாக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படாததை தொடர்ந்து வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.

Covid-19 வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மாகாண அரசாங்கத்தோடு அனைத்து மக்களும் விதிமுறைகளுக்கு ஒத்துழைத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Covid-19 தொற்றிலிருந்து மாகாணம் விரைவில் மீண்டு வர அனைவரும் அதற்கான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.