இந்தியர்களுக்கு எளிமையாக்கப்பட்ட விமான பயணம் – கனடாவின் பயண ஆலோசனை

Air-India-787-Dreamlin

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக கனடா சர்வதேச பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.தற்பொழுது சர்வதேச நாடுகள் அனைத்திலும் தடுப்பூசி விகிதங்கள் அதிகரித்திருப்பதால் கனடிய அரசாங்கம் பயண கட்டுபாடுகளை படிப்படியாக நீக்கியுள்ளது.இந்தியாவிற்கும் கனடாவுக்கும் இடையேயான பயணம் எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கனடா மற்றும் இந்தியா Covid-19 பரிசோதனை தேவைகளை நீக்கியுள்ளது. இது பயணிகளின் பயணத்தை மேலும் எளிதாக்கியது. கனடிய அரசாங்கத்தின் இந்தியாவுக்கான பயண ஆலோசனையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கனடிய அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் எதிர்மறையான RT-PCR பரிசோதனையை பெறுவதற்கான கட்டாயத் தேவை இல்லை என்று கூறியுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு முன் ஆய்வகத்தில் RT-PCR பரிசோதனை பெறுவதற்கு முன்பு கனடிய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்தியாவிலிருந்து கனடாவிற்கு பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்றவகையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் Covishield மற்றும் Covaxin ஆகிய இரண்டு தடுப்பூசி மருந்துகளும் பயண நோக்கங்களுக்காக கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் கனடாவிற்குள் நுழைய முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து கனடாவிற்கு இணைப்பு விமானத்தின் மூலம் பறக்கும் பயணிகள் மூன்றாவது நாட்டிலிருந்து எதிர்மறையான பரிசோதனை முடிவை பெற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.