இந்திய மாணவர்கள் கனடாவில் உயிரிழப்பு – சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இடங்கள்

indian students killed in accident

கனடாவில் வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் குடியேறியுள்ளனர். கனடாவில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்திய உயர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கனடிய எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குடும்பத்தினர் கடும் குளிரில் உறைந்து உயிரிழந்தனர்.

கனடாவில் நடைபெற்ற சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடாவிலுள்ள இந்திய உயர் ஆணையத்தின் தலைவர் Ajay Bisaria திங்கள்கிழமை தெரிவித்தார்.மேலும் அவர் டுவிட்டரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் .

Harpreet Singh, Jaspinder Singh, Karanpal Singh, Mohit Chouhan மற்றும் Pawan Kumar ஆகியோர் வேனில் மேற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது டிராக்டர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. நெடுஞ்சாலை 401-ல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quinte West Ontario மாகாண காவல்துறையினரின் அறிக்கையின்படி விபத்து அதிகாலை 3:45 மணியளவில் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விபத்து குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படவில்லை. விபத்து குறித்த விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர்கள் சாலை விபத்தில் கனடாவில் உயிரிழந்த செய்தி அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.