கனடாவிலுள்ள இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – கல்லூரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய மாணவர்கள்

student visa punjab india canada

கனடாவிலுள்ள மூன்று கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனடாவில் படித்து வரும் இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கல்லூரிகள் மூடப்பட்டிருப்பபதை அடுத்து ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கனடாவில் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து கட்டணத்தை வசூலித்து கொண்டு பல நாட்களாக வகுப்புகளை நடத்தாமல் கல்லூரிகளை மூடி வைத்துள்ளன.தற்பொழுது மூன்று கல்லூரிகளை எதிர்த்து இந்திய மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கனடாவில் உள்ள மூன்று தனியார் கல்லூரிகள் திடீரென மூடப்பட்டுள்ளதால் அங்கு படிக்கும் 2000 சர்வதேச மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திடீரென மூடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படும் 3 தனியார் கல்லூரிகள் மீது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாணவர்கள் முழு கட்டணத்தையும் கல்லூரியில் கட்டிய நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூன்று கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். மூன்று கல்லூரிகளும் முதலில் 2021 நவம்பர் 30ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 10-ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறைகளை அறிவித்துள்ளன.

29000 க்கும் அதிகமான கனடிய டாலர்களை கல்லூரியில் கட்டணமாக செலுத்திய சர்வதேச மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.