கனடாவிற்கு பயணம் செய்யும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – பின்னணி என்ன?

indian finance minister will fly to canada soon meet mary ng chrystia freeland

கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng இந்தியாவுடனான வர்த்தகம் தொடர்பாக இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்வரும் மாதங்களில் பயணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடிய துணைப்பிரதமர் Chrystia Freeland மற்றும் வர்த்தக அமைச்சர் உட்பட கனடிய அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளுக்காக இந்திய நிதியமைச்சர் இந்த வசந்த காலத்தில் கனடாவிற்கு செல்வதற்கு திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கனடிய பயணம் உறுதி செய்யப்படாத நிலையில் ,இதுகுறித்த விவரங்களுக்கு அந்தரங்கமான அதிகாரிகள், கனடிய பயணம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடைசியாக 2016ஆம் ஆண்டு கனடாவிற்கு சென்ற போது அப்போதைய கனடிய வர்த்தக அமைச்சரான Chrystia Freeland-ஐ சந்தித்தார்.

2019-ஆம் ஆண்டு இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அப்போது கனடாவின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த Philippe Champagne-வை சந்தித்தார். கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜூலி போன்ற அமைச்சர்களின் எதிர்கால வருகைகள் இந்திய அட்டவணைகளில் இடம்பெற்றிருக்கலாம் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கனடா – இந்தியா இடையேயான பரஸ்பர நல்லுறவு மற்றும் வர்த்தக மேலாண்மை குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றதாக கனடிய துணை அமைச்சர் மோர்கன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்