கனடாவில் பாதுகாப்பு கேட்கும் இந்தியா – குடியரசு தின விழாவிற்கு அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கைகள்

republic indian embassy ottawa

கனடாவின் வான்கூவர் நகரத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் ஒரு வருடத்திற்கு முன்பு போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு ,அந்த இடத்தில் காலிஸ்தான் விரிவுரைகள் நடத்தப்பட்டது.

ஒரு வருடத்திற்குப் பின்னர் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி கனடாவிடம் அந்நாட்டில் உள்ள அதன் தூதரக பணிகளில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டது.இதுபோன்ற இடையூறுகள் மீண்டும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் ஒட்டாவாவிற்கான இந்திய உயர் ஆணையத்தால் கனடாவின் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையான வாய்மொழி குறிப்பு வழியாக இந்தியாவின் கோரிக்கை தெரிவிக்கப்பட்டது .

கனடாவில் உள்ள இந்திய தூதரக அமைப்புகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்பான துல்லியமான மற்றும் முக்கியமான தகவல்களை தொடர்பு கொண்டதாகவும் மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றாக பணிபுரியும் கனடிய சக ஊழியர்களுக்கு ,இந்திய தூதரக அதிகாரிகள் அனுபவித்த அச்சுறுத்தல்களை பற்றி ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் மேலும் ஆபத்து ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டதாகவும் அதிகாரி கூறினார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால் அச்சுறுத்தல் தொடர்பான கவலை அதிகரித்துள்ளது. வான்கூவர் நகரத்தில் குடியரசு தின விழாவிற்கு இடையூறு விளைவிப்பது குறித்த அறிக்கைகள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளன. தூதரக பாதுகாப்பு நிலைநிறுத்துவதற்கு ரோந்து பணியை மேம்படுத்த இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன