கனடாவில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம் – அசத்திய கிராமிய நடனக் குழு

India Republic Day Celebration in Canada : இந்தியாவின் 71ஆம் ஆண்டு குடியரசு தின விழா கனடாவில் கோலாகலமாக கொண்டப்பட்டது.

பனரோமா இந்தியா என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு 1999ஆம் ஆண்டு கனடாவில் தொடங்கப்பட்டது. இந்திய தூதரகம் அளிக்கும் நிதியின் மூலம் இயங்கும் இந்த அமைப்பு கனடா முழுவதும் வாழும் இந்தியர்களை ஒன்றிணைத்து, உதவ உருவாக்கப்பட்டது.

கனடாவுக்கான இந்திய தூதராக அஜய் பிசாரியா நியமனம்

இந்தநிலையில் இந்தியாவின் 71ஆம் ஆண்டு குடியரசு தின விழா பனரோமா இந்தியா அமைப்பினரால் பிராம்ப்டன் நகரில் பிப்ரவரி 3ஆம் தேதி கோலாகலமாக கொண்டப்பட்டது. இசை அமைப்பாளர் குரிந்தர் சீகலின் (gurinder seagal) சிறப்பு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய குடியரசு தின விழாவில் கிராமிய நடனம், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி போன்றவற்றையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவில் பங்கேற்ற அண்டாரியோ (Ontario) மாகாணத்தின் தலைவர் டக் ஃபோர்ட், ” இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும்
அண்டாரியோவில் உள்ள இந்திய சமூகத்தை தான் நேசிப்பதாகவும், இந்தியாவுடனான இத்தகைய வலுவான சமூக மற்றும் பொருளாதார உறவுகள் கிடைத்து இருப்பதற்கு தாங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டு இருப்பதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் அண்டாரியோ மாகாணத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தீபக் ஆனந்த், பார்ம் கில், Rudy Cuzzetto ஆகியோர் பங்கேற்றனர்.

கனடாவில் படிக்க விருப்பமா? மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி