போலியான கனடா விசா தயாரித்த மும்பையைச் சேர்ந்த இளைஞர் – ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்ததால் மோசடி செய்வதாக தகவல்

indian in canada

Covid-19 வைரஸ் தொற்று ஊரடங்கு காலத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டதால் நிறுவனங்களில் பணி புரிந்த பணியாளர்கள் பலரும் வேலையை இழந்து தவித்தனர். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சிலர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் மும்பை நகரத்தில் ஊரடங்கு காலத்தின்போது வேலையை இழந்த ஐடி தொழிலாளி ஒருவர் மோசடியில் ஈடுபட்டதாக கனடிய விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள புனே நகரத்தைச் சேர்ந்த பொறியாளர் தனக்கு கனடாவில் வேலை கிடைத்ததாக பெற்றோரை நம்பவைத்து போலியான விமான டிக்கெட்டுகள் மற்றும் கனடா விசா தயாரித்துள்ளார் . போலி ஆவணங்கள் மூலம் கனடாவிலுள்ள வான்கூவர் விமான நிலையத்திற்கு பறந்து சென்ற பொறியாளர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

30 வயதான ஐடி தொழிலாளி தனது வேலையை இழந்தபிறகு மற்றொரு வேலையை தேடும் பொருட்டு (புனே -டெல்லி) (டெல்லி -வான்கூவர்) வழித்தடத்திற்கு விமான டிக்கெட்டுகளை தயாரித்து போலியான கனடா விசா மூலம் மோசடி செய்த பொறியாளர் டிசம்பர் 9ஆம் தேதி மாலை விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விமான நிலைய அதிகாரிகள் காவல் துறையிடம் மோசடி செய்த நபரை ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில் லேப்டாப் ,இன்டர்நெட் லிங்க் மற்றும் பிரின்டர் போன்ற தொழில்நுட்ப கருவிகளின் உதவியோடு போலியான விமான டிக்கெட்டுகள் மற்றும் விசாவை தயாரித்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் பயின்ற பிடெக் பட்டதாரி என்றும் படித்த மற்றும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்