இந்தியா-கனடா இடையே வர்த்தக ஒப்பந்தம் – டெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்களும் பேச்சுவார்த்தை

canada tamil news

இந்தியாவும் கனடாவும் இருநாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தகம் ,பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்துடன் ஒப்புக்கொண்டதாக வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் கனடிய வர்த்தக அமைச்சர் மேரி NG ஆகியோர் இந்தியா – கனடா பொருளாதார ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர். இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை அன்று கனடா மற்றும் இந்தியா இடையேயான முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான 5-வது கட்ட அமைச்சர் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்திய வேளாண் பொருட்களான ஸ்வீட் கார்ன்,பேபி கார்ன் மற்றும் வாழைப்பழங்களுக்கான சந்தை அணுகல் ஆகியவற்றில் கனடாவின் அணுகுமுறையை அங்கீகரிப்பது தொடர்பான தீவிர பணிகளை மேற்கொள்ள இரண்டு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இடைக்கால ஒப்பந்தத்தில் பொருட்கள் ,சேவைகள் ,சுகாதாரம் ,தாவர சுகாதார நடவடிக்கைகள்,பிறப்பிட விதிமுறைகள் மற்றும் வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப தடைகள் போன்றவற்றில் உயர் மட்ட உறுதிப்பாடுகள் அடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய கரிம ஏற்றுமதி பொருட்களை எளிதாக்குவதற்காக விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஆணையத்தின் கோரிக்கையை விரைவாக ஆய்வு செய்யப்பட ஒப்புக்கொண்டது. இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்களும் நாடுகளுக்கிடையேயான வர்த்தகங்களில் மிக முக்கியமான துறைகளில் மீள்திறன் கொண்ட வினியோக தொடர்புகளை நிறுவுவதன் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.