கனடாவுடன் கைகோர்க்கிறது இந்தியா – சீனாவிடம் வர்த்தக போர் நடத்துகிறதா?

canada tamil news

சீனாவுடனான மெங் வான்ஜோ மற்றும் 2 மைக்கேல்ஸ் விவகாரம் தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து கனடாவின் ட்ரூடோ அரசாங்கம் சீனாவிற்கு பொருளாதார தடைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

சீனாவால் சிறைபிடிக்கப்பட்ட மைக்கேல்ஸ் ஸ்பவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகிய இரண்டு கனடியர்களும் சமீபத்தில் பாதுகாப்பாக கனடாவிற்கு திரும்பினர் .மூன்று வருடங்களுக்கும் மேலாக சீன அரசாங்கத்தின் சிறை பிடியில் இரண்டு கனடியர்களும் சிக்கித் தவித்த நிலையில் கனடிய அரசாங்கத்தின் அழுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் பலனாக இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சீனாவிற்கு பொருளாதார மாற்று வழிகளை கனடிய அரசாங்கம் நாடுவதால், இந்தியா தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கைகோர்த்து வருகிறது.

இந்தியா தனது வர்த்தக கொள்கைகளுக்காக ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை நோக்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வர்த்தக கொள்கைக்காக தற்பொழுது கனடா உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

கனடா பொருளாதார சார்பில் சீனாவை விடுத்து ஆசிய சந்தைகளில் பன்முகப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தைகளை தொடங்கியது. தாய்லாந்து ,இந்தோனேசியா உள்ளடக்கிய 10 நாடுகள் இவற்றில் அடங்கும்.

ரோமில் நடைபெற்ற G20 மாநாட்டில், இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உடன் சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதம் செய்தார். “இந்தியா மற்றும் கனடா வணிக வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறேன் ” என்று ஒரு பேட்டியில் மேரி கூறியுள்ளார் .