புலம்பெயர்தல் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை – கனடிய புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் குடியுரிமை மற்றும் குடிவரவு அமைப்பு விளக்கம்

passport Resident Visa
Resident Visa passport

கனடாவிற்கு புலம்பெயர்வதற்கான விண்ணப்பங்கள் சில புதிய திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படாது. கனடிய பணி அனுபவம் மற்றும் கூட்டாட்சி திறன்மிகு பணியாளர் திட்டம் போன்றவற்றைக் கொண்டுள்ள நபர்களுக்கான புலம்பெயர்தல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை வரவேற்காதது ஏன் என்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் கனடிய புலம்பெயர்தல் அமைப்பு விளக்கமளித்துள்ளது.

ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள பல விண்ணப்பங்கள் பரிசீலனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் புதிய புலம்பெயர்தல் திட்டத்தின் கீழ் பலரது விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக கனடிய புலம்பெயர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கனடிய புலம்பெயர்தல் அகதிகள் குடிவரவு மற்றும் குடியுரிமை அமைப்பு , 2021 ஆம் ஆண்டிற்கான குடிவரவு இலக்கை அடையும் நோக்கில் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் கனடாவில் குடியேறுவதற்கான உரிமம் போன்ற விண்ணப்பங்களை விரைவாக செயல்படுத்துவதற்காக Federal skilled worker program திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் அழைப்பு விடுப்பதை நிறுத்தி விட்டதாக IRCC. தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 1.8 மில்லியன் விண்ணப்பங்கள் பரிசீலிக்க படாமல் இருப்பதாக 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி தெரியவந்துள்ளது. எக்ஸ்பிரஸ் நுழைவு திட்ட விண்ணப்பதாரர்களில் 85% சதவீதம் பேர் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிரந்தர குடியிருப்பு உரிம விண்ணப்பங்கள் ,தற்காலிக குடியிருப்பு உரிம விண்ணபங்கள் ,கனடிய குடியுரிமை விண்ணப்பங்கள் போன்றவை நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களில் அடங்கும் என்று அமைப்பு தெரிவித்துள்ளது.