இந்திய சட்டத்தின் கீழ் பயணிகளுக்கு விலக்கு – கனடிய குடிமக்களின் சர்வதேச பயண கட்டுப்பாடுகள்

covaxin india who canada

இந்தியாவின் ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் Covaxin தடுப்பூசிக்கான ஒப்புதல் கடந்த நவம்பர் 19ஆம் தேதி கனடிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக Covaxin தடுப்பூசி போடப்பட்டவர்களை கனடாவிற்குள் நுழைவதற்கு நவம்பர் 30-ஆம் தேதி முதல் அனுமதிக்கும்.

மருத்துவ காரணங்களால் Covid-19 தடுப்பூசி மருந்துகளுக்கு விலக்கு பெற்றவர்கள் covid-19 மூலக்கூறு பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும். கனடாவிற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் பயணம் செய்வதற்கு நவம்பர் 30-ஆம் தேதி முதல் தடுப்பூசி தேவைப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .

முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட நபர்கள் கனடாவை விட்டு வெளியேறி 72 மணி நேரத்திற்குள் மீண்டும் கனடாவிற்கு திரும்பினால் நுழைவதற்கு முந்தைய மூலக்கூறு சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று கனடிய அரசாங்கம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி மருந்துகளுக்கும் கனடிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளில் ஏதேனும் ஒன்றின் முழு அளவை பெற்றிருந்தால் மட்டுமே கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

சர்வதேச மாணவர்கள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள் ,18 வயதுக்கு மேற்பட்டவர்கள், குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தவர்கள் மற்றும் கனடாவில் பணி அனுமதி பெற்றவர்கள் போன்ற அனைவருக்கும் தடுப்பூசி விதிமுறைகள் பொருந்தும் என்று கனடிய அரசாங்கம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய சட்டத்தின் கீழ் கனடாவிலிருந்து வரும் கனடிய குடிமக்கள் தரை அல்லது வான்வெளிப் பயணம் மூலமாக புறப்பட்டு மீண்டும் நுழைந்து கனடாவில் இருந்து விலகி இருப்பதை நிரூபிக்கும் பயணங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும்.