செய்திகள்

கனடாவில் மிசிசாகா பகுதியில் பல வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோரவிபத்து!

mississauga
The scene of the crash in the area of Hurontario Street and Mineola Road. Adam Dabrowski / Global News

Mississauga: கனடாவில் மிசிசாகா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து தொடர்பாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறையினர் கூறுகின்றனர்.

குயின் எலிசபெத் சாலைக்கு தெற்கே, மினோலா சாலையின் சந்திப்புக்கு அருகிலுள்ள ஹூரோன்டாரியோ தெருவில் இந்த விபத்து நள்ளிரவுக்குப் பிறகு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதிகாரிகள் வந்த பார்த்த போது, சம்பவ இடத்தில் 19 வயது இளைஞரைக் கண்டனர். அவர் சம்பவ இடத்திலேயே  இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது பெயர் மற்றும் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஓட்டுநர்களில் ஒருவர் நடந்து சென்றவாறே தப்பி ஓட முயன்றார். ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, சிறிது தூரத்திற்கு அருகிலேயே கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர் ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது காரில் இருந்த ஒரு பெண், உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் இருந்தார் என்று காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே ஒரு ஆணும், ஒரு பெண்ணும் துணை மருத்துவர்கள் அடங்கிய குழுவிடம் சிகிச்சை பெற்றனர்.

ஆரஞ்ச்வில்லி பகுதியைச் சேர்ந்த 46 வயதான பீட்டர் சிம்ஸ் தற்போது கவனக்குறைவாக  செயல்பட்டு இறப்பை ஏற்படுத்துதல், மற்றும் மரணத்தை ஏற்ப்படுத்தும் விபத்துக்குப் பிறகு நிறுத்தத் தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏற்கனவே இரண்டு கவனக்குறைவு தொடர்பான குற்றச்சாட்டுகள் ஓட்டுநர் சிம்ஸ் மீது இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க: கனேடிய நகரம் அடுத்த இத்தாலியாக மாறலாம்! மக்களுக்கு விடுக்கப்படும் அதிதீவிர கொரோனா எச்சரிக்கை!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Related posts

Ye Jianhui: நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை விதித்து சீனா உத்தரவு!

Editor

Dylan Ehler : கனடாவில் மூன்று வயது குழந்தைக்காக $15,000 கொடுக்க காத்திருக்கும் பெற்றோர்!

Editor

canada economy: பலத்த அடி வாங்கிய கனடா பொருளாதாரம் – ஏப்ரல் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ன ஆனது தெரியுமா?

Editor