நெடுஞ்சாலை 401 – பாலியல் விற்பனைக்கு கடத்தல்காரர்களின் பொதுவான பாதை

sell sex kidnap

கனடாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஆட்கடத்தலுக்கு ஆளாகியுள்ள சுமார் 267 பேர் Hope Found திட்டத்தின் மூலம் ஆதரவை நாடியுள்ளனர் .ஆட்கடத்தலில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்தவர்களில் இரண்டு பேர் மட்டுமே கனடாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள். கனடாவில் மனித மற்றும் பாலியல் கடத்தல் அதிகரித்து வருவது உள்நாட்டு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தில் Windsor மற்றும் கியூபெக் மாகாணத்தின் எல்லைக்கு இடையே உள்ள 401 பாதையானது இளம்பெண்களை பாலியல் விற்பனையில் கட்டாயப்படுத்தி இரண்டு கூட்டங்களுக்கு இடையே கொண்டு செல்வதற்கு கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பாதையாகும் .

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பிரச்சனையை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள், உணவக மேலாளர்கள் மற்றும் பள்ளி வாரிய தலைவர்கள் அனைவரும் போராடுவதற்கு துணை நிற்க வேண்டும் என்று அழைக்கப்படுகின்றனர்.

Voice found-ன் நிர்வாக இயக்குனர் சிந்தியா பிளான்ட் “இதுபோன்ற கடத்தல் நிகழ்வுகளில் ஒன்டாரியோ மிக முக்கிய மையமாக உள்ளது” என்று கூறினார்.இந்த அமைப்பானது உயிர் பிழைத்தவர்கள் தலைமையில் ஆனதாகும்.மேலும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதாரம் என்று சிந்தியா தெரிவித்தார் .எவரேனும் கடத்தல் சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முயற்சித்தால் நாங்கள் அவர்களுக்கு உதவுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.